’இது பதவி அல்ல, பொறுப்பு’: கவுன்சிலர்களுக்கு அட்வைஸ் செய்த தளபதி விஜய்

சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் எதிர்க்கட்சியான அதிமுக கடும் தோல்வியைச் சந்தித்தது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய்யின் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் 169 பேர் போட்டியிட்டனர் என்பதும் அவர்களில் 139 பேர் வெற்றி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தின் கவுன்சிலர்கள் அனைவரும் விஜய்யை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் விஜய் தரப்பிலிருந்து வெற்றிபெற்ற கவுன்சிலர்களுக்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் ’இது பதவி அல்ல பொறுப்பு’ என்பதை முழுமையாக உணர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என அனைத்து கவுன்சிலர்களும் தளபதி விஜய் அட்வைஸ் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி கிடைத்துள்ளதாகவும் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தளபதி விஜய்யின் மக்கள் இயக்கம் முழு அளவில் போட்டியிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print