Entertainment
பின் தொடர்ந்த ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை
நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் புதிய படம் தயாராகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்து வருகிறார்.

சென்னை பின்னி மில் மற்றும் காட்டாங்கொளத்தூரில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.
படப்பிடிப்பை முடித்து விட்டு காரில் புறப்பட்ட விஜயை ரசிகர்கள் சிலர் தலைவா தலைவா என பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
வண்டியை நிறுத்திய விஜய் அவர்களுக்கு
ஏதாவது ஆகிவிடக்கூடாது என்று கார் கண்ணாடியை இறக்கி பின்தொடர்ந்து வரவேண்டாம், பத்திரமாக திரும்பி செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
ரசிகர்களுக்கு அவர் அறிவுரை சொல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
