Connect with us

விஜய் 66ன் ஃபஸ்ட் லுக் போஸ்டர் – வாழ்த்துக்களுடன் கருத்துக்களை பதிவிடும் ரசிகர்கள்!

vijay spl

Entertainment

விஜய் 66ன் ஃபஸ்ட் லுக் போஸ்டர் – வாழ்த்துக்களுடன் கருத்துக்களை பதிவிடும் ரசிகர்கள்!

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தளபதி 66 படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டருடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி படத்திற்கு தமிழில் வாரிசு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.இந்த படம் ஒரு குடும்ப செண்டிமென்ட் படம் என்பதால் தந்தை பாகனுக்குமான உறவை பற்றி அமைவது தான் இந்த கதை அதனால் வாரிசு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என நினைப்பதை மனதில் வைத்து வாரிசு என அதாவது அரசியல் வாரிசு என வைத்துள்ளாரோ என்று கமண்ட் செய்து வருகின்றனர். மேலும் சிலர் விஜய்யின் இந்த போஸ் கபாலி படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை நினைவுபடுத்துகிறது என தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வ்ருக்கின்றனர்.

இந்நிலையில் ரசிகர்கள் தனது அண்ணனாக நினைக்கும் விஜய் அவர்களுக்கு மனமாற தனது வாழ்த்துக்களை கூறி அதனுடன் விஜய் குறித்து அவர்களின் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் பிறந்தநாள் – பரிசு கொடுத்த தயாரிப்பு நிறுவனம்! அப்படி என்ன பரிசா இருக்கும்?

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top