
Entertainment
விஜய் 66 – வெளியான 3வது லுக்! பிறந்தநாளை முன்னிட்டு அடுத்தடுத்து அப்டேட்!
நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தளபதி 66 படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை 6.01 மணிக்கு வெளியானது . படத்திற்கு தமிழில் வாரிசு என்று தலைப்பு வைத்து ஃபஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அதை தொடர்ந்து இன்று விஜய்யின் பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடபட்டு வருகிறது,அவரின் ரசிகர்கள் படத்தின் தலைப்பு மற்றும் ஃபஸ்ட் லுக் போஸ்டரை ஷேர் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதை தொடர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக படக்குழு இன்று இரண்டாவது லுக் போஸ்டரை ஷேர் செய்துள்ளது. இதில் விஜய் அவர்கள் மாட்டுவண்டியில் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளது.
மாஸாக வெளியானது விஜய் 66ன் இரண்டாவது லுக் போஸ்டர் ! விஜய் வேற லெவல்…
