விசாரணை கைதி விக்னேஷ் மரணம்-காவல் ஆய்வாளர் இடமாற்றம்!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக் கைதி விக்னேஷ் காவல் நிலையத்தில் வைத்து மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை உடற்கூறு ஆய்வு செய்தபோது 11 இடங்களில் காயம் இருந்ததாகவும் லத்தியால் அடித்த தடம் இருந்ததாகவும் தெரிந்தது.

மேலும் தலையில் ஒரு அங்குலம் அளவிற்கு படுகாயம் ஏற்பட்டு இருந்ததாகவும்  உடற்கூறு ஆய்வின் ஆணையில் கண்டறியப்பட்டது. இதனால் இந்த கொலை தொடர்பாக 11 காவலர்களிடம் விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையிலும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. கைதி விக்னேஷ் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சென்னை விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் சிக்கிய ஆய்வாளர் தென்மண்டல காவல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தென் மண்டல காவல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். உதவி ஆணையர் சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment