Connect with us

சிவகார்த்திகேயனை அடுத்து விக்னேஷ் சிவன் நயனுக்காக எழுதிய பாடல்

Entertainment

சிவகார்த்திகேயனை அடுத்து விக்னேஷ் சிவன் நயனுக்காக எழுதிய பாடல்

a9521ed48505a8ee517fc0a8c9011325-1தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா தற்போது `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ அஜித்தின் விஸ்வாசம், தெலுங்கில் ஜெயசிம்ஹா, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் குறும்பட இயக்குனர் படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்த நிலையில் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்றான நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் கோலமாவு கோகிலா’ படத்திற்காக அனிருத் 6 பாடல்களை கம்போஸ் செய்துள்ளார். இதில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக சிவகார்த்திகேயன் எழுதிய ‘கல்யாண வயசு’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

d4eae5d88d5fa69cac97ce585d5f9e41

இந்த நிலையில் இன்று மூன்றாவது பாடலை வெளியிட இருக்கிறார் அனிருத். ‘ஒரே ஒரு…’ என்று தொடங்கும் இந்த பாடலை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் எழுதி இருக்கிறார். இன்று இரவு 7 மணிக்கு இந்த பாடல் வெளியாகவுள்ளது.

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில், நயன்தாராவிற்காக இந்த பாடலை அவர் எழுதிய இந்த பாடல் காதல் ரசம் சொட்ட சொட்ட இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top