விக்னேஷ் சிவன் படத்தில் நடிகையாக அறிமுகமாகும் பிரபல டான்ஸ் மாஸ்டர்…!

இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என பலர் நடிகர்களாக அறிமுகமாகி நடித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபல டான்ஸ் மாஸ்டர் கலா நடிகையாக அறிமுகமாகி உள்ளார். அதுவும் பிரபல நடிகை நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய படத்தில்.

 மாஸ்டர் கலா

அதன்படி விக்னேஷ் சிவன் மற்றும் லலித் குமார் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் இந்த படத்தில் தான் பிரபல டான்ஸ் மாஸ்டர் கலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இதற்காக கிட்டத்தட்ட 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 1989ஆம் ஆண்டு இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான புதுப்புது அர்த்தங்கள் படம் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானவர் தான் கலா மாஸ்டர். இவர் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவின் முக்கிய நடன இயக்குனராக இருந்து வருகிறார்.

அதேபோல் இவரது சகோதரி பிருந்தாவும் ஒரு பிரபலமான டான்ஸ் மாஸ்டர் தான். அவர் தற்போது ஹே சினாமிகா படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அதே சமயம் பிருந்தா மாஸ்டர் நடிகை அவதாரம் எடுத்துள்ளார். அக்கா தங்கை இருவரும் ஒரே சமயத்தில் புதிய அவதாரம் எடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment