Connect with us

விக்னேஷ் சிவனுக்கு ‘தானா கிடைத்த பரிசு’:

Entertainment

விக்னேஷ் சிவனுக்கு ‘தானா கிடைத்த பரிசு’:

கடந்த ஜனவரி மாதம் விக்னேஷ் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு பின்னர் சூர்யாவின் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வெற்றிக்கு நன்றி சொல்லும் வகையில் நேற்று சூர்யா, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சிகப்பு நிற டொயோட்டா கார் ஒன்றை பரிசாக அளித்தார். இந்த பரிசு விக்னேஷ் சிவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி என்பதை சொல்லவே தேவையில்லை

இந்த பரிசு தனக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதாகவும், இந்த பரிசுக்கு நான் தகுதியானவன் என்பது தெரியவில்லை என்றாலும் சூர்யாவுக்கு தனது நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் அடுத்த இயக்கவுள்ள சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top