
பொழுதுபோக்கு
விக்னேஷ் சிவனுக்கு மீண்டும் திருமணம்.. பகீர் கிளப்பும் பெரியப்பா..!
விக்னேஷ் சிவனுக்கு மீண்டும் திருமணம் நடைபெறும் என அவரது பெரியப்பா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விக்னேஷ் சிவன் – நயன்தாரா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,கார்த்தி,சூர்யா,விஜய்,விஜய் சேதுபதி,விக்ரம் பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி பூர்வீகமாகக் கொண்டவர் விக்னேஷ் சிவன். இவரது தந்தை போலீசாக பணியாற்றியவர் சென்னைக்குக் குடிபெயர்ந்து விட்டார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது திருமணத்திற்கு சொந்த பெரியப்பா பெரியம்மா அழைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. தனது திருமணத்திற்கு பெரியப்பா பெரியம்மா உள்பட உறவினர்கள் யாரையுமே அழைக்காதது அவர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்டம் லால்குடியில் வசிக்கும் அவரது பெரியப்பா மாணிக்கம் வேதனையுடன் தெரிவித்ததாவது எங்கள் பெற்றோர்களுக்கு 8 ஆண் குழந்தைகள் இரண்டு பெண் குழந்தைகள் இதில் நான்தான் மூத்தவன் அதாவது என் தம்பி எனக்கு அடுத்து பிறந்தவர் வேலை நிமித்தமாக பிரிந்து வெவ்வேறு இடங்களில் வசித்து வருகிறோம்.
எனது மனைவி பெயர் பிரேமா எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் நாங்கள் விக்னேஷ் சிவனையும் அவனது சகோதரி எங்களது சொந்த குழந்தையாகவே பார்த்து வருகிறோம். எனது அப்பா இறந்த பிறகு விக்னேஷ் உள்ளிட்ட யாரும் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. விக்னேஷ் சிவன் பெரியவர்களை கலந்து ஆலோசித்து இந்த திருமண ஏற்பாடுகள் செய்யாதது எனக்கும் எனது மனைவிக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
பாலா மனைவிக்கு இரண்டாவது திருமணமா.. மாப்பிள்ளை யார் தெரியுமா.?
திருமணத்திற்கு அழைக்க வில்லை அதோடு காலை ஒன்பது மணியிலிருந்து ஒன்பது முப்பது மணி நேரம் என்பது குளிகை நேரத்தில் திருமணம் மற்றும் வீட்டில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் அது திரும்பத் திரும்ப நடைபெறும் என்பது ஐதீகம். இந்த நேரத்தில் நயன்தாரா கழுத்தில் தாலி கட்டியுள்ளார். அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் இந்த மாதிரி வீட்டில் நடக்கும் முதல் திருமண நிகழ்ச்சியில் எங்கள் குடும்பத்தில் 11 பேர் வாரிசுகள் உள்ள நிலையில் அவர்கள் யாரையும் கலந்து கொள்ளாமல் விக்னேஷ் சிவன் திருமணம் செய்திருப்பது குடும்பத்திற்கு மிகுந்த மன வேதனையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்திருந்தார்.
