விக்னேஷ் முன்னாடியே நயன்தாராவிற்கு லவ் யூ சொன்ன ரசிகர்! சொன்னது யாரு என தேடிய நயன்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போழுது பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். தற்போழுது அவர் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் கனெக்ட்.

இந்த திரைப்படம் வரும் 22ம் தேதி வெளியாக உள்ள நிலையில் நேற்றிரவு பத்திரிக்கையாளர் மற்றும் சினிமா பிரபலங்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

இந்த படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களும் சிறப்பாக தனது திறமையை வெளிக்காட்டியுள்ளனர் கனெக்ட் திரைப்படம் நயன்தாராவுக்கு மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முற்றிலும் வித்தியாசமான திகில் படமாக இந்த படம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு நடந்த சிறப்பு காட்சியில் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் ஜோடியாக திரையரங்கில் கலந்துள்ளார்.

நயன்தாராவின் வருகையை அறிந்த ரசிகர்கள் திரளாக கூடி சிறந்த வரவேற்பை கொடுத்துள்ளனர். காரில் வந்தது இரங்கி திரையரங்கிற்கு உள்ளே சென்றது என ரசிகர்கள் படை பலமாக பின்தொடர்ந்தனர்.

அட்லி வீட்டு வளைகாப்புக்கு கையில் பெரிய பரிசுடன் வரும் விஜய்! தெறிக்கவிடும் வீடியோ…

அந்த நேரத்தில் கூட்டத்திற்கு நடுவில் நயன்தாரா நடந்து வரும் போது அவருக்கு ரசிகர்களில் ஒருவர் லவ் யூ சொல்ல மகிழ்ச்சியில் நன்றி கூறியுள்ளார் நயன். மேலும் தனக்கு யாரு லவ் யூ சொன்னது என நயனும் கூட்டத்தில் தேடும் வீடியோ தற்போழுது வைரலாகி வருகிறது.

https://www.facebook.com/watch/?v=494623539226669

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.