ராணிப்பேட்டை, திருவள்ளூர், நாகை, கடலூர், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாக் எழுந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சார் பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்களின் தலையீடு அதிகம் இருப்பதாகவும், பத்திர பதிவிற்கு அதிக அளவில் லசம் பெறப்படுவதாகவும் அடுத்தடுத்து குற்றச்சாட்டுக்கள் குவிந்துள்ளனர்.
இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, பொன்னேரி, நாகை, தேனி, கடலூர், அரக்கோணம் உள்ளிட்ட இடங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் கட்டுகட்டாக பணம் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். செய்யாறு இணை சார் பதிவாளர் அலுவலகத்திலும் சோதனை தொடர்ந்து வருகிறது.தேனியில் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள சார் பதிவாளர் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
அரக்கோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிக லஞ்சம் பெறுவதாகவும் மேலும் இடைத்தரகர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அதிக புகாரின் அடிப்படையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் உள்ளே புகுந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் அலுவலகத்தின் நுழைவு வாயில் கேட்டை மூடி பொதுமக்ககளை உள்ளே வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இங்கு ராணிப்பேட்டை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான 8 பேர் கொண்ட அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்காக லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்ததை அடுத்து தற்போது கடலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.