ஞாபகம் இருக்கா மக்களே T23 புலி? மாஸ் காட்டும் தற்போதைய வீடியோ!

கடந்த வருடம் மசனகுடி வனப்பகுதியில் ஆட்கொல்லி புலி ஒன்று சுற்றித் திரிந்தது. அதற்கு T23 என்றும் பெயர் வைத்தனர். T23 புலியின் தற்போதைய நிலைமை குறித்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் மற்றும் அதன் மசனகுடி வனப்பகுதியில் நான்கு பேரை அடித்துக் கொன்றது. அதோடு மட்டுமில்லாமல் அங்குள்ள கால்நடைகளையும் T23 புலி தாக்கியது.

இந்த T23 புலி அதன் பின்னர் வனத்துறையினரின் கடினமான முயற்சியோடு 21 நாட்களுக்கு பின்பு மயக்க ஊசி செலுத்தி அக்டோபர் 15ஆம் தேதி T23 புலி பிடிபட்டது. அதன் பின்னர் மைசூர் உயிரியல் மறுவாழ்வு மையத்தில் T23 புலி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மைசூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் T23 புலி  முழு உடல் நலத்துடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் உறுமியவாறு புலி அறையில் இருந்து வெளிவந்து மாமிசத்தை உட்கொள்கிறது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment