மதுபோதையில் தள்ளாடிய பூனை.. மதுப் பிரியர்கள் செஞ்ச வேலைதான் இது!

டாஸ்மாக் ஒன்றின் முன் பூனைக் குட்டி ஒன்று குடி போதையில் தள்ளாடியபடி நடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அதாவது கொரோனா காலகட்டத்தில் பெரிய அளவில் வேலைவாய்ப்பு இல்லாமல் உணவுப் பற்றாக்குறையால் மக்கள் தவித்தனர். ஆனால் அந்த காலகட்டத்திலும் எப்படியாவது குடித்தே தீர வேண்டும் என்று மதுப் பிரியர்கள் வட்டிக்குக் கடன் வாங்கி குடித்த பல சம்பவங்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.

ஊரடங்கு தளர்விக்குப் பின் டாஸ்மாக் வழக்கம்போல் களை கட்டி வருகின்றது. மதுப் பிரியர்கள் ஒருபுறம் ஜாலியாக இருக்க, பூனைக்குட்டி ஒன்றினையும் ஜாலியாக்கும் சம்பவம் ஒன்றினைச் செய்துள்ளனர்.

அதாவது டாஸ்மாக் அருகில் இருந்த பூனை ஒன்றிற்கு மதுவினை ஊற்றிக் கொடுக்க, அதுவும் குடித்துள்ளது. அதன்பின்னர் அந்தப் பூனை போதையில் தள்ளாடியபடி நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின்றது.

இதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் நகைத்தாலும், வாயில்லா ஜீவனையும் இப்படி செஞ்சது யார் என்று பலரும் திட்டி வருகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.