விக்கி – நயன் மீது போலீஸ் புகார்: காரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா.

தமிழில் 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா நானும் ரெளடிதான் படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவன் மீது காதல் மலர்ந்தது.

இந்நிலையில் தற்போது இவர்கள் ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளனர். இதனிடையே அஜித் நடிப்பில், ‘ஏகே 62’ என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் பரவியது.

இந்த தகவலை உறுதி படுத்தும் விதமாக ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் விக்னேஷ் சிவன் வீட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர்.

இதனை கண்டித்து சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்( சமூக ஆர்வலர்) காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதில் சமூக பொறுப்பின்றி, இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும், ரவுடிகளை ஊக்கப்படுத்தும் விதமாக ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற பெயரில் பட தயாரிப்பு நிறுத்தை தொடங்கியது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.

மேலும், இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாரா அவர்கள்  ரவுடிகளை ஊக்கப்படுத்தும் விதமாக செயல்படுவதால் இவர்களை கைது செய்து நடிவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment