காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட விக்கி….!

சிம்பு வரலட்சுமி நடிப்பில் வெளியான போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். இப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரெளடி தான் படத்தை இயக்கியதன் மூலம் விக்னேஷ் சிவன் மேலும் பிரபலமானார்.

காத்து வாக்குல ரெண்டு காதல்

நானும் ரெளடி தான் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய் சேதுபதி இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கூட்டணி அமைத்துள்ள படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இரண்டு டாப் நாயகிகள் நடித்துள்ளார்கள்.

படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. ஏற்கனவே படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது மூன்றாவது பாடலும் வெளியாக உள்ளதாம்.

அதன்படி இப்படத்தில் இடம்பெற்றுள்ள நான் பிழை எனும் பாடல் ஜனவரி 3ஆம் தேதி அதாவது இன்று வெளியாகும் என படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என டாப் நடிகர்கள் படத்தில் இடம்பெற்றுள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment