விபத்துகளில் சிக்காமல் இருக்க இந்த மந்திரத்தை சொல்லுங்க…

816ea4d127094374b0639ad4674c1b77

மனித வாழ்வு நிலையற்றது. அவசர யுகத்தில் வாகன விபத்து, மின்சார விபத்து, கேஸ் சிலிண்டர் விபத்து என.. மனிதனின் ஆயுளை குறைப்பதில் போட்டி போட்டுக்கொண்டு அற்பாயுசில் உயிரை எடுக்கின்றன..

நாம் எத்தனைதான் கவனமாய் இருந்தாலும் விபத்துகளில் சிக்குவதை தவிர்க்க முடியாது. இவ்வாறு விபத்துகளில் சிக்காமல் இருக்க கீழ்க்காணும் மந்திரத்தினை சொல்ல வேண்டும்..

காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம்..
மேலை இருவினையும் வேரறுத்தோம் – கோல..
அரணார் அவிந்தழிய வெந்தீ அம்பு எய்தான்…
சரணார விந்தங்கள் சார்ந்து.” – காரைக்கால் அம்மையார்.

c16edd4caa1173377e61f6ebf1f3bad2

பாடலின் விளக்கம்:

சிவபெருமானை வழிபடும் அன்பர்களிடம் எமதூதர்கள் வரவே மாட்டார்கள்.
சஞ்சித வினை அல்லது பழவினை வேரோடு அழிந்து ஒழியும்.
நரகம் என்பது இல்லாமல் போகும். சிவ வாழ்வு கிட்டும். என்றும் இன்பமாய் வாழலாம்…

விபத்துகளின்மூலம் உயிரை பறிக்க வரும் எமதூதர்களை நம்மிடமிருந்து விலக்கி நம்முடைய முன்வினையை அழித்து , துன்பம் இல்லாமல் இன்பமாய் நூறாண்டு வாழ்வதற்கு இறைவருடைய திருப்பாதங்களை நாம் விடாது பற்ற வேண்டும் என்கிறார் காரைக்கால் அம்மையார்.

இப்பாடலை காலையில் குளித்து முடித்து இம்மந்திரத்தினை சொல்லி வந்தால் நம்முடைய வினைகள் நீங்கும் . வீட்டின் வெளியேயும், உள்ளேயும் எந்த விபத்துகளிலும் சிக்காமல் நூறாண்டுகள் வாழலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.