பழம்பெரும் நடிகையை அடித்தே கொலை செய்த மகன்: பிணத்தை ஆற்றில் தூக்கியெறிந்த கொடூரம்!

73 வயதான பழம்பெரும் நடிகையை அவரது மகன் அடித்தே கொலை செய்து பிணத்தை ஆற்றில் தூக்கி எறிந்ததாக விசாரணையில் தெரிய வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பழம்பெரும் பாலிவுட் நடிகை வீணா கபூர் என்பவர் கடந்த 70களில் பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அவர் தற்போது வயது முதுமை காரணமாக மும்பையில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

veena kapoor

இந்த நிலையில் அவரின் மூத்த மகன் சச்சின் கபூர் தனது தாயிடம் அடிக்கடி சொத்து தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக சச்சின் கபூர் தனது தாயை அடித்துக் கொலை செய்துள்ளார். இதனை அடுத்து அவர் பிணத்தை 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆற்றில் தூக்கி எரிந்து விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் இது குறித்து அமெரிக்காவில் உள்ள வீணா கபூரின் இரண்டாவது மகன் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் விசாரணை செய்து மூத்த மகன் சச்சின் கபூரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.