பழம்பெரும் நடிகர் ஈ.ராமதாஸ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்

தமிழ் திரை உலகின் குணசித்திர நடிகர் ஈ.ராமதாஸ் காலமானதாக வெளியான செய்தியை அடுத்த திரை உலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரை உலகின் குணசித்திர நடிகர்களில் ஒருவர் ஈ.ராமதாஸ். அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு வயது 66.

நடிகர் ஈ.ராமதாஸ் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் ஒருச்ல திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி உள்ளார் என்பதும் 6 திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் இருக்கும் நடிகர் ஈ.ராமதாஸ் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக அதிக போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1980 ஆம் ஆண்டு ’நூறாவது நாள்’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டரில் அறிமுகமான நடிகர் ஈ.ராமதாஸ் அதன் பிறகு பல திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார் என்பதும் குறிப்பாக வசூல்ராஜா எம்பிபிஎஸ், காக்கி சட்டை, விக்ரம் வேதா உங்ககிட்ட பல படங்களில் நடித்தார்.

மேலும் ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ என்ற திரைப்படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமான ஈ.ராமதாஸ் அதன்பின் ‘ராஜா ராஜா தான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, ராவணன் உள்பட ஒரு சில படங்களையும் இயக்கி உள்ளார். மேலும் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கின்னஸ் சாதனை திரைப்படமான சுயம்வரம் என்ற திரைப்படத்தை இயக்கிய 14 இயக்குனர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இ ராம்தாஸ் அவர்களின் மகன் தனது சமூகவலை தனது பக்கத்தில் தனது தந்தை ஈ.ராமதாஸ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஆனால் சிகிச்சையின் பலன் இன்றி காலமானதாகவும், அவருடைய இறுதிச்சடங்கு இன்று காலை 11 மணிக்கு கேகே நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளார். இதனை அடுத்து ஈ.ராமதாஸ் மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.