பழம்பெரும் நடிகர் திலீப்குமார் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

8e5dfa6609ec301579cc7eae37298b15

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் சற்று முன்னர் காலமானார். அவருக்கு வயது 98 

கடந்த 1944ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டுவரை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகர் திலீப் குமார். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாகவும் வயது மூப்பு காரணமாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் 

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானதாக அவரது மனைவி சாய்ராபானு என்பவர் தெரிவித்துள்ளார். பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் திலீப் குமாரின் மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

பிரபல நடிகர் திலீப் குமார் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் அவரது இறுதி சடங்கு இன்று நடக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. நடிகர் திலீப் குமாரின் மறைவிற்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தங்களது டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.