சாய்னாவிடம் மன்னிப்பு கேட்ட சித்தார்த்- மன்னிப்பு அறிக்கை வெளியிட்டார்

பிரதமர் மோடி சமீபத்தில் பஞ்சாப் சென்றிருந்தபோது அவர் கார் விவசாயிகள் போராட்டத்தால் மறிக்கப்பட்டது. இதனால் உடனே கிளம்பி சென்றார் மோடி.

இந்த விவகாரம் பெரிய அதிர்ச்சியை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நோவல் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் யாருக்கு பாதுகாப்பு இருக்கும் என்ற வகையில் டுவிட்டரில் எழுதினார்.

இதற்கு பதிலளித்த சித்தார்த் சாய்னா நோவலை ஆபாச பொருள் படும்படி எழுதி இருந்தார். இந்த விவகாரம் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெண்கள் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியது இதனால் நேற்று முழுவதும் சித்தார்த்துக்கு எதிரான செய்திகளே சுற்றிவந்த நிலையில்,

சித்தார்த் திடீரென மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஒரு நகைச்சுவை யாருக்கும் புரியவில்லை என்றால் அது சிறந்த நகைச்சுவை அல்ல. தங்களது ட்வீட்டுக்கு பதிலாக நான் பதிவிட்ட வார்த்தைகள் அதன் விதத்தை நியாயப்படுத்த முடியாது.

என்னுடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். எப்போதும் நீங்கள் தான் என் சாம்பியன் என்றும் கூறியுள்ளார்.

https://twitter.com/Actor_Siddharth/status/1480962679032324097?s=20

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment