சளித்தொல்லை , அஜீரண கோளாரா புதுசா வெற்றிலை வைத்து துவையல் ட்ரை பண்ணி பண்ணலாம்!

நம் வீட்டில் பெரியவர்கள் வெற்றிலை போடுவதை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால் அதில் உள்ள மருத்துவ பலன்களை நாம் அறிந்ததில்லை. சளித்தொல்லை , அஜீரண கோளாரா சரி செய்ய புதுசா வெற்றிலை துவையல் செய்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வெற்றிலை – 10

காய்ந்த மிளகாய் – 4

வெங்காயம் – 1

தேங்காய் துருவல் – கையளவு

பூண்டுப் பல் – 3

புளி – சிறிதளவு

உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி

கடுகு – அரை தேக்கரண்டி

பெருங்காயத்தூள் – சிட்டிகை

எண்ணெய் – 2 தேக்கரண்டி

உப்பு – சுவைக்கு ஏற்ப

ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத இன்ஸ்டன்ட் இட்லி மாவு!

வெற்றிலைத் துவையல் செய்முறை:

வெற்றிலையில் காம்பு, நடு நரம்பை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கொள்ளவும் .

அதனுடன் வெங்காயம், பூண்டு, தேங்காய் துருவல், வெற்றிலை , காரத்திற்கு வத்தல் சேர்த்து வதக்கவும். பின்பு புளி, உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும்.

சர்க்கரை நோயாளிக்கு சப்பாத்தி வேண்டாம் புதுசா கோதுமை இடியாப்பம் செய்யலாம்!

ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்த துவையலாக அரைத்து எடுக்கவும். இப்போது சத்தான சுவையான வெற்றிலைத் துவையல் ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.