அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை தொட்ட நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினரிடம் கடும் மோதல்கள் நிலவி வருகிறது.
குறிப்பாக கடந்த மாதம் ஜூலை 11-ம் தேதி நடைப்பெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது அதிமுக பொதுக்குழு கூட்டமானது செல்லாது என தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் வழக்கின் தீர்ப்பானது இன்று 2 நீதிபதிகள் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தார்.
இத்தகை தீர்ப்பானது ஓபிஎஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்வதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.