கவுதம் மேனன் – சிலம்பரசன் டிஆர் – ஏ.ஆர்.ரஹ்மான் மூன்றாவது கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் வெந்து தனிந்து காடு. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அக்னி குஞ்சொன்று கண்டேன் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிம்பு தனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து 17 வயது சிறுவன் போல காட்சி அளித்தார்.இந்த படத்தில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சிம்புவின் கேரக்டர் முற்றிலும் மாறுபட்ட கேரக்டராம். மேலும் இப்படத்தில் சிம்பு ஐந்து விதமான வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. படத்தில் குஜராத்தி நடிகை சித்தி இட்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார். மேலும் கயடு லோஹர், சித்திக், நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.சிம்புவின் இந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் கௌதம் மேனன், சிம்பு இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து இருப்பதாகவும், இந்த படத்தில் இன்டர்வல் ப்ளாகில் சிங்கிள் ஷாட் ஃபைட் அமைந்துள்ளதாகவும் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்பிரைஸாக இருக்கும். சண்டை காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு உள்ளது என புகழ்ந்து கூறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கல்லா கட்டும் கமல் ! சீசன் 6 எப்போ ஆரம்பம் தெரியுமா ?
சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்கு தணிக்கைக்குழு மற்றும் ரன்னிங் டைம் குறித்த மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியுள்ளது. அதோடு இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரமாக உள்ளது. படம் வெளியாக இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தை பார்க்க சினிமா ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.