’வெண்ணிலா கபடி குழு’ திரைப்பட நடிகர் திடீர் மரணம்: கோலிவுட் திரையுலகினர் இரங்கல்!

’வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் ஹரி வைரவன் திடீரென காலமானதை அடுத்து கோலிவுட் திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

‘வெண்ணிலா கபடி குழு’ ’குள்ளநரி கூட்டம்’ ’நான் மகான் அல்ல’ உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகராக நடித்தவர் நடிகர் ஹரி வைரவன். இவர் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் சூரியுடன் சேர்ந்து காமெடி வேடத்தில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பாக புரோட்டா கடை காட்சியில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

vennila kabadi kulu2 இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஹரி வைரவன் நேற்று இரவு 12 மணிக்கு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியபோது, ‘வெண்ணிலா கபடிகுழு’ திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் ஹரி வைரவன் இறைவனடி சேர்ந்தார்/ அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

vennila kabadi kulu1மதுரையை சேர்ந்த ஹரி வைரவன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் தனது வாழ்வாதாரத்தை இழந்து குடும்பத்துடன் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் திரையுலகினர் பலர் அவருக்கு நிதி உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக உடல்நிலை மீண்டுவந்த ஹரி வைரவன் திடீரென மரணம் அடைந்து அனைவரையும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரி வைரவன் இறுதிச் சடங்குகள் இன்று மதுரையில் நடைபெறும் என்றும் இதில் நடிகர் நடிகைகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.