சிவகார்த்திகேயனுடன் இணைந்த வெங்கட் பிரபு…. செம குஷியில் ரசிகர்கள்….!

யாருமே எதிர்பார்க்காத வகையில் மாநாடு என்ற ஒரே ஒரு படம் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்து விட்டார் இயக்குனர் வெங்கட் பிரபு. இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று கொடுத்ததோடு அவரின் மார்க்கெட்டையும் உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.

வெங்கட்பிரபு

தற்போது வெங்கட் பிரபு இளம் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் டான், அயலான் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இப்படங்களை தொடர்ந்து சிங்கப்பாதை மற்றும் ஒரு சில புதிய படங்களிலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

அந்த வரிசையில் முதன் முறையாக சிவகார்த்திகேயன் நடிக்கும் நேரடி தெலுங்கு படமும் அடங்கும். தமிழ் மற்றும் தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு தற்காலிகமாக SK 20 என தலைப்பு வைத்துள்ளனர்.

பிரபல தெலுங்கு இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளதாகவும், சுரேஷ் தயாரிக்கவுள்ளதாகவும் படக்குழுவினர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி இயக்குனர் வெங்கட் பிரபு SK20 படத்தில் இயக்குனர் அனுதீப்புடன் இணைந்து படத்தின் திரைக்கதையில் பணியாற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். வெங்கட் பிரபு இணைந்துள்ளதால் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment