மாநாடு படத்தின் வெற்றி-வெங்கட் பிரபுவின் அடுத்த படம்

இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில்  சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் ராக்ஃபோர்ட் எண்டெர்டைன்மெண்ட் தயாரிப்பில் மன்மதலீலை என்ற திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார்.  இந்த திரைப்படத்தை விரைவில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

இதுவரை தயாரிப்பு மற்றும் இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர் படத்தின் தலைப்பை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகின்றனர்.  இந்த நிலையில் படத்தின் தலைப்பை அடுத்த வாரம் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். மேலும்  ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிட உள்ளனர்.

வெங்கட்பிரபுவின் மாநாடு திரைப்படம் வெற்றியடைந்ததால் இந்த திரைப்படத்தின் வியாபாரம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment