Entertainment
’கோச்சடையான்’ பாணியில் உருவாகும் வெங்கட்பிரபு படம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு தொடங்குவதற்கு இன்னும் தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. அப்படியே அனுமதித்தாலும் மாநாடு போன்ற திரைப்படங்கள் படப்பிடிப்பு நடத்துவது என்பது மிகவும் கஷ்டம் என்று கூறப்படுகிறது
படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்தால் 50 முதல் 60 பேர்கள் மட்டுமே படக்குழுவினர் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கலாம் என்று கருதப்படுவதால் பொன்னியின் செல்வன், மாநாடு போன்ற திரைப் படங்களின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் மாநாடு படப்பிடிப்பை அப்படியே வைத்து விட்டு புதிதாக ஒரு வெப்சீரிஸ் இயக்கும் பணியில் வெங்கட்பிரபு தொடங்கியுள்ளார்
ஐசரிகணேஷ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் வருண் கதாநாயகனாக நடிப்பதாக கூறப்படுகிறது மேலும் கோச்சடையான் படத்தில் பயன்படுத்தப்பட்ட மோஷன்பிக்சர் தொழில்நுட்பம் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட உள்ளதாகவும் வெப்சீரிஸ் உலகில் முதல் முதலாக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
இந்த திரைப்படம் ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படம் என்றும் இந்த திரைப்படம் வெங்கட்பிரபு பாணியில் நகைச்சுவையுடன் கூடிய அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
