பிரேம்ஜியின் திருமணத்தை வைத்து சிம்புவை கலாய்த்த வெங்கட் பிரபு…

இசைஞானி இளையராஜா அவர்களின் சகோதரரான இயக்குனர் கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு ஆவார். இவர் தமிழ் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். ஆரம்பத்தில் இசைஞானி இளையராஜா அவர்களின் மகன்களான இசையமைப்பாளர்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோருடன் பின்னணி குழு பாடல்களில் பாடகராக திரையுலகில் தனது பணியை தொடங்கினார்.

பின்னர் வெங்கட் பிரபு தனது சகோதரரான பிரேம்ஜி மற்றும் குழந்தை பருவ நண்பரான SPB சரண் ஆகியோருடன் இணைந்து இசைக்குழுவை நிறுவி மேடை நிகழ்ச்சிகளை நடத்தினர். 1997 ஆம் ஆண்டு தனது தந்தை இயக்கிய ‘பூஞ்சோலை’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்பு ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘சிவகாசி’, ‘வாழ்த்துக்கள்’, ‘உன்னை சரணடைந்தேன்’ போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். 2007 ஆம் ஆண்டு தனது நண்பரான SPB சரண் அவர்களின் தயாரிப்பில் விளையாட்டு நகைச்சுவை படமான ‘சென்னை- 600028’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வெங்கட் பிரபு.

சென்னை- 600028 திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது. இதன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார் வெங்கட் பிரபு. 2008 ஆம் ஆண்டு ‘சரோஜா’, 2011 ஆம் ஆண்டு ‘கோவா’ ஆகிய படங்களை இயக்கினார். இவ்விரு படங்களும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

2012 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு அஜித்குமாரை வைத்து ‘மங்காத்தா’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் அந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. பின்னர் ‘மாசிலாமணி’, ‘சென்னை- 600028 பாகம் 2’, பிரியாணி போன்ற திரைப்படங்களை இயக்கியும், சில படங்களில் நடித்தும் பிரபலமானவர் வெங்கட் பிரபு.

தற்போது அனைவரும் எதிர்பார்த்த வெங்கட் பிரபுவின் சகோதரர் பிரேம்ஜியின் கல்யாண பத்திரிக்கை இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இதைப் பற்றி பேசிய வெங்கட் பிரபு, என் தம்பியின் கல்யாண பத்திரிகை பாத்துட்டு 90ஸ் கிட்ஸ் எங்களுக்கு கல்யாணம் நடக்கும்னு நம்பிக்கை வந்துட்டு அப்டினு சொன்னாங்க. நான் இதைப் பார்த்தாவது சிம்பு கல்யாணம் பண்ணிக்கட்டும், அப்படி பண்ணிக்கிட்டா நல்லா இருக்கும்னு சொன்னேன் என்று சிம்புவை கலாய்த்துள்ளார் வெங்கட் பிரபு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...