இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மூன்றாவது முறை இணைந்து நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு . தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிம்பு தனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து 17 வயது சிறுவன் போல காட்சி அளித்தார்.
இந்த படத்தில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சிம்புவின் கேரக்டர் முற்றிலும் மாறுபட்ட கேரக்டராம். மேலும் இப்படத்தில் சிம்பு ஐந்து விதமான வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானியும், ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
வெந்து தணிந்தது காடு படத்திலும் சிம்பு ஐந்து தோற்றங்களில் நடிப்பதாக தெரிந்ததில் இருந்து இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிம்புவின் இந்த திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஓரிரு மாதங்களுக்கு முன்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் சிலம்பரசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெந்து தனித்து காடு படத்திற்கு டப்பிங் பேசி முடித்ததாக அப்டேட் செய்தார்.
அதை தொடர்ந்து ஹீரோயின் சித்தி இத்னானி தனது கதாபாத்திரத்திற்கான டாப்பிங் பேசி முடித்துள்ளார்.இவர் மும்பையைச் சேர்ந்தவர் என்றாலும் கவுதம் மேனன் கொடுத்த ஊக்கத்தில் இதை சாதித்துள்ளார்.. டப்பிங்கை முடித்ததும் கவுதம் மேனனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மீண்டும் சின்ன திரையில் ‘குக் வித் கோமாளி’ கனி! எந்த சேனலில் தெரியுமா?
மேலும் கவுதம் மேனன் சாருக்கு நன்றி தெரிவித்து ,இப்போது கூட நான் கவுதம் மேனன் பட ஹீரோயின் என்பதை நம்ப முடியவில்லை” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
Andddd that’s a wrap for Paavai’s dubbing🤍
Thank you @menongautham sir for believing in me and letting me DUB for myself.
Dreams do come true… still can’t believe I am a GVM Heroine! 🧿🥹♥️🤍#VendhuThanindhathuKaadu pic.twitter.com/XjBykxUSs1— Siddhi Idnani (@SiddhiIdnani) August 5, 2022