Connect with us

திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் OTT ரிலீஸ் தேதி தெரியுமா ?

simbu 1 2

பொழுதுபோக்கு

திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் OTT ரிலீஸ் தேதி தெரியுமா ?

தமிழ் சினிமாவின் முன்னணி நட்ஷத்திரங்களாகிய கவுதம் மேனன் – சிலம்பரசன் டிஆர் – ஏ.ஆர்.ரஹ்மான் மூன்றாவது கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தில் சிம்பு தனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து 17 வயது சிறுவன் போல காட்சி அளித்தார்.இந்த படத்தில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சிம்புவின் கேரக்டர் முற்றிலும் மாறுபட்ட கேரக்டராம். மேலும் இப்படத்தில் சிம்பு ஐந்து விதமான வேடங்களில் நடித்துள்ளார்.

படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. படத்தில் குஜராத்தி நடிகை சித்தி இட்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படம் நல்ல விமனர்சனங்களை பெற்று வருகிறது.

simbu 1 2 1

இப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும், மேலும் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு தி லைஃப் ஆஃப் முத்து என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த படம் இரண்டு நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ 23 கோடி வசூலித்தது.

இயக்குனர் லோகேஷ்க்கு ஆசிஷ்டன்ட் ஆக வேண்டுமா ? கதை ரெடியா .. போட்டித்தேர்வு குறித்த தகவல் இதோ !

ஒரு இந்திய தளம் படத்தின் OTT மற்றும் சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ளது. அனேகமாக அக்டோபர் இறுதியில் படம் டிஜிட்டல் அறிமுகமாகும். திரையரங்குகளில் ஓடிய முதல் மூன்று நாட்களில் நன்றாக ஓடிய இப்படம், பாக்ஸ் ஆபிஸில் கணிசமான தொகையை வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top