திரும்பி வந்த லிட்டில் சூப்பர் ஸ்டார்! யூடியூப் ட்ரெண்டிங்கில் வெந்து தணிந்தது காடு!!

தீபாவளியன்று வெளியாகி வேற லெவல் ஹிட்கொடுக்கும் எதிர்பார்த்த திரைப்படம் மாநாடு. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. இருப்பினும் படம் என்று வெளியாகிறதோ அன்று தான் தீபாவளி என்று மாநாடு திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவர் கூறியிருந்தார்.

maanadu trailer9

அதேபோல் மாநாடு திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ஹிட்டடித்தது. இதனால் பல வருடங்களுக்குப் பின்பு மீண்டும் லிட்டில் சூப்பர் ஸ்டாரை பார்த்ததாக ரசிகர்கள் கொண்டாடினர்.

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின்  சில காட்சிகள் வெளியானது.

வெளியான சில காட்சிகளும் யூடியூப்பில்  பிரிண்டிங் ஆனதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார்.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இதற்கு ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். முத்துவின் பயணம் என்ற தலைப்பில் ஏ.ஆர். ரகுமான் பின்னணி பாடலில் படத்தின் சில காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment