எதிர்பாராத விதமாக ரிலீஸ் தேதியை மாற்றிய வெந்து தணிந்தது காடு ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

தமிழ் சினிமாவின் முன்னணி நட்ஷத்திரங்களாகிய கவுதம் மேனன் – சிலம்பரசன் டிஆர் – ஏ.ஆர்.ரஹ்மான் மூன்றாவது கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அக்னி குஞ்சொன்று கண்டேன் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிம்பு தனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து 17 வயது சிறுவன் போல காட்சி அளித்தார்.இந்த படத்தில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சிம்புவின் கேரக்டர் முற்றிலும் மாறுபட்ட கேரக்டராம். மேலும் இப்படத்தில் சிம்பு ஐந்து விதமான வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

simbu 1 1

படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. படத்தில் குஜராத்தி நடிகை சித்தி இட்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார். படம் இந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

இப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும், மேலும் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு தி லைஃப் ஆஃப் முத்து என்று பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கு பதிப்பும் செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழ் பதிப்பு வெளியாகும் அதே நாளில் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ரன்னிங் டைம் கண்டு மிரளாமல் களமிறங்கும் வெந்து தணிந்தது காடு ! சென்சார் குறித்து மாஸ் அப்டேட்!

simbuu

எதிர்பாராத சில தொழில்நுட்பச் சிக்கல்களால் தெலுங்குப் பதிப்பின் வெளியீடு தாமதமாகும். தி லைஃப் ஆஃப் முத்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள திரையரங்குகளில் அசல் பதிப்பு வெளியான 2 நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியிடப்படும் என விநியோகஸ்தர்களால் அதிகாரப்பூர்வமாக பகிரப்பட்டது,

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment