Entertainment
வரலட்சுமிக்கு விஜய்சேதுபதி செய்த உதவி
பிரபல நடிகை வரலட்சுமி தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். விஜய்யுடன் ‘தளபதி 62’, விஷாலுடன் ‘சண்டக்கோழி’, கவுதம் கார்த்திக்குடன் ‘மிஸ்டர் சந்திரமெளி, மற்றும் எச்சரிக்கை, ஷக்தி, அம்மாயி, நீயா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் அவர் நடித்து வரும் இன்னொரு படம் ‘வெல்வெட் நகரம். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியாகியது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டு உதவியுள்ளார்.
பத்திரிகையாளராக வரலட்சுமி இந்த படத்தில் நடித்து வருகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தை மனோஜ்குமார் என்பவர் இயக்கி வருகிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது.
