ஆரி இல்லை என்றால் நான் தான் ஜெயித்திருப்பேன்!… வேல்முருகன்!!!!

c698c9769accdd8a41d09a3dd19f18ee

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். 

இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர் வேல்முருகன் தற்போது அளித்திருக்கும் பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றியும் ஆரி பற்றியும் நமக்கு தெரியாத பல விஷயங்களை கூறியுள்ளார்.அவர் கூறும்பொழுது “ஆரி  வெளியிலிருந்து மக்கள் டிவியில் பார்ப்பது போலவே அவர் உள்ளிருந்து விளையாடினார். 

உள்ளே இருப்பது மட்டும்தான் அவர், ஆனால் அவரது செயலும் எண்ணமும் வெளியே  மக்கள் எப்படி சிந்திக்கிறார்கள் என்பதை பொறுத்து தான் இருக்கும். அவரது சிந்தனை முழுக்க மக்கள் எப்படி ஒரு விஷயத்தை பார்ப்பார்கள் என்று யோசிப்பார். அதற்கு மிகப் பெரிய திறமை வேண்டும். அதை அழகாக செய்தார் கடைசிவரை ஜெயித்தார். எனவே அவருக்கு  கிடைத்த பதினாறு கோடி ஓட்டு பெரிசா அல்லது உள்ளே இருந்த 16 பேர் பெருசா? என்று கூறியுள்ளார்.

மேலும் ஆரி இல்லை என்றால் யார் ஜெயித்திருப்பார்கள் என்ற கேள்விக்கு. “ஆரி இல்லை என்றால் ஒருவேளை நான் அந்த வீட்டில் இருந்திருந்தால் நான் ஜெயித்து இருப்பேன்” என்று தன்னம்பிக்கையுடன் அவர் கூறுகிறார். அதற்கு அடுத்ததாக “சொல்ல வந்த விஷயங்களை துணிச்சலாக பேசும் பாலா கோபத்தை மட்டும் விட்டுவிட்டு இருந்தால் அவரும் அடுத்தபடியாக டைட்டில் ஜெயிதிருக்க வாய்ப்பு இருப்பதாக” அவர் தன் கருத்தை கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.