இன்று மதியம் முதல் நாளை வரை பள்ளி, கல்லூரிகளுக்கு: எந்த மாவட்டத்தில்?

மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் இன்று மதியம் முதல் மாலை வரை வேலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சற்று முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வங்க கடலில் தோன்றிய மாண்டஸ் புயல் புதுவை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க இருப்பதால் சென்னை உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

holiday

இதன் காரணமாக இன்று தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வேலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று மதியம் முதல் நாளை வரை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சென்னை உள்பட மேலும் சில மாவட்டங்களுக்கு நாளை பள்ளி கல்லூரி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.