கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் ஒரு பகுதியாக ஓமிக்ரான் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது.
இதனால் இந்தியாவில் கொரோனா சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அரசு சார்ந்த நிறுவனங்கள் பலவற்றிலும் பொது இடங்கள் பலவற்றிலும் கொரோனா சோதனை செய்யப்பட்டு வருகிறது.
பார்லிமெண்ட்டில் இன்று சோதனை செய்யப்பட்டபோது 400க்கும் மேற்பட்ட பார்லிமெண்ட் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் வேலூர் மாநகரில் உள்ள புகழ்பெற்ற சி.எம்.சி மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் இங்கு வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டாம் எனவும் முன்பதிவு, அவசர சிகிச்சை மட்டும் மேற்கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.