வேலூர் சிஎம்சி கல்லூரியில் ராகிங்.. ஐகோர்ட் புதிய உத்தரவு!!

வேலூர் CMC கல்லூரியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேலூர் CMC கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்ததாக இறுதியாண்டு மாணவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

சென்னையில் சோகம்!! குடிபோதையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளைஞர் பலி!!

இது சம்மந்தமாக வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.

வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்ப்போது CMC கல்லூரி தரப்பில் அஜரான வழக்கறிஞர், ராகிங் புகார் வந்ததையடுத்து விடுதி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

9 மாவட்டங்களுக்கு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை..!!

அதன் படி, இதுவரையில் 7 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது பேசிய நீதிபதி கல்வி நிறுவனங்களில் ஒழுக்கம் மிக முக்கியம் என்று தெரிவித்தனர்.

அதோடு விவகாரம் குறித்து இது வரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment