Connect with us

முக ஸ்டாலினுக்கு பரிசாக வந்த முருகப்பெருமானின் வெள்ளிவேல்!

News

முக ஸ்டாலினுக்கு பரிசாக வந்த முருகப்பெருமானின் வெள்ளிவேல்!

91ec6cdc691a509d35cbc5dc3feca231

கடவுள் மறுப்பு கொள்கையாளர் என்று கருதப்படும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு முருகப்பெருமானின் வெள்ளி வேல் பரிசாக வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அவ்வப்போது இந்து கடவுளை கேலியும் கிண்டலும் செய்வார் என்பது தெரிந்ததே. மேலும் இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க மாட்டார் என்பதும் இந்து மத சடங்குகளை கிண்டல் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தேர்தல் நெருங்கும் வேளையில் அவர் இந்துக்களுக்கு தான் எதிரி இல்லை என்றும் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவன் என்றும் கூறி வருகிறார். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வருகை தந்தார். 

42ab69a1412c2b1b6d5281b632afffa9

அப்போது அங்கிருந்த அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பாக இந்து மத மக்கள் ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை செய்தனர். மேலும் முருகப்பெருமானிடம் பூஜை செய்த வேல் ஒன்றையும் ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

சமீபகாலமாக வேல் வைத்து பாஜக அரசியல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் முக ஸ்டாலின் அவர்களே வேலை கையில் வைத்தபடி போஸ் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top