வெள்ளி விழா நாயகன் மோகன் நடிக்கும் ஹரா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

வெள்ளி விழா நாயகன் மோகன் நடிப்பில் புதிய திரைப்படமாக ஹரா என்ற திரைப்படம் தயாராகிறது. 2008ல் சுட்ட பழம் என்ற படத்தில் நடித்ததற்கு பிறகு மோகன் எந்த ஒரு புதிய தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

சில கன்னட படங்களில் மட்டும் நடித்தார். மோகன் பொதுவாகவே 1991வரை பிஸியாக இருந்தார் உருவம் படத்துக்கு பிறகு பல வருடம் கழித்து 1999ம் ஆண்டு அன்புள்ள காதலுக்கு என்ற படத்தில் மட்டும் நடித்தார்.

தற்போது மீண்டும் ஹரா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை தாதா 87படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்குகிறார்.

இப்படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு இன்று நடந்தது இதில் தயாரிப்பாளர், இயக்குனர் , நடிகர் மோகன் போன்றோர் கலந்து கொண்டனர்

அது சம்பந்தமான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment