இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் பகுதியில் ஷேர் ஆட்டோவில் சென்று, ஷேர் ஆட்டோக்காரர் வீட்டில் இரவு உணவு உட்கொண்டார். அதன் பின்னர் அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.
அதன் வரிசையில் தற்போது டெல்லி மாநில அரசு இலவச யாத்திரை திட்டத்தில் நம் தமிழகத்தின் வேளாங்கண்ணி பகுதியை சேர்த்துள்ளது. அதன்படி டெல்லி அரசின் இலவச புனித பயணத்திட்டத்தில் தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி மாதா கோவில் சேர்க்கப்பட்டுள்ளது.
தமது அரசின் இலவச புனித பயண திட்டத்தில் வேளாங்கண்ணி கோயிலை சேர்த்துள்ளதாக டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மூத்த குடிமக்களுக்கான இலவச பயண ரயில் அடுத்த மாதம் டிசம்பர் 3 ஆம் தேதியில் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்து மூத்த குடிமக்களுக்கு பிரயோஜனமளிக்கும் வகையில் இலவச ரயில் புனிதயாத்திரை திட்டத்தோடு வேளாங்கண்ணி புனித யாத்திரை திட்டத்தையும் இணைத்து சேர்த்துள்ளது.