மீண்டும் களைகட்டிய ECR சாலை: சற்றுமுன் போக்குவரத்துக்கு அனுமதி!

சென்னை அருகே மகாபலிபுரத்தில் நேற்று இரவு மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 6 மணி வரை சென்னை – புதுவை இடையே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்களுக்கு தடை விதிக்கப் பட்டது., இதனையடுத்து சென்னை – புதுவை சாலைகளில் எந்த விதமான வாகனங்களும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புயல் கரையை கடந்து விட்ட நிலையில் சாலைகளில் விழுந்து இந்த ஓரிரு மரங்களும் அகற்றப்பட்ட நிலையில் தற்போது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை – புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் தற்போது வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.

இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கார் லாரி ஆகியவை அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் கிழக்கு கடற்கரை சாலை தற்போது களைகட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையிலுள்ள ஒரு சில பகுதிகளில் சாலைகளில் மரங்கள் விழுந்து கிடப்பதாகவும், மரங்களை அகற்றும் பணியில் உடனுக்குடன் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து சென்னையில் இன்று மாலைக்குள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.