தேங்கிய மழைநீர்! நீருக்குள் மூழ்கிய சென்னை; வாகன போக்குவரத்து மாற்றம்!

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் பெய்த கனமழை காரணமாக சாலைகள், வீடுகள் என அனைத்தும் மழை நீருக்குள் மூழ்கி உள்ளது. இதனால் சென்னையில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்பட்டு வருகிறது.

சென்னை
 

இந்நிலையில் கே.கே நகர் ராஜமன்னார் சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதால் இரண்டாவது அவன்யூவை நோக்கி போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதால், ஆற்காடு ரோடு செல்ல கேசவர்தினி சாலைனையை நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.

வாணி மஹால்-பென்ஸ் பார்க் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் அபிபுல்லா சாலை, ராகவன் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது. வடிகால் நீர் அமைக்கும் பணியில் உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் எதிர்திசையில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

உதயம் சந்திப்பில் காசி முனை தொடங்கி அண்ணா பிரதான சாலை செல்லும் கனரக வாகனங்கள் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது.

மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டு காமாட்சி மருத்துவமனை வழியாக வாகனங்கள் திருடப்பட்டுள்ளது. அசோக்நகர் போஸ்டல் காலனி சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதால் அங்கு வரும் வாகனங்கள் மெதுவாக சாலையை கடந்து செல்கின்றன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment