“காய்கறி விலை குறைவாக இருந்தாலும் வாங்க ஆட்கள் இல்லை” -வியாபாரிகள் வேதனை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனமழை காரணமாக சென்னையில் காய்கறிகளின் விலை அதிகரித்து வந்தது. அதன் பிறகு மழை பாதிப்பு குறைந்ததால் காய்கறிகளின் விலையும் சற்று குறையத் தொடங்கியது.

இதனால் விளைச்சல் அதிகரித்தும், அண்டை மாநிலங்களில் இருந்து இறக்குமதியும் அதிகரிக்க தொடங்கியதால் காய்கறி விலை குறைய தொடங்கியது.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் காய்கறிகள் மலிவு விலையில் விற்கப்படும் காய்கறிகளை வாங்க ஆட்கள் இல்லாததால் அவைகள் வீணாக போகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அங்கு தற்போது காய்கறிகளின் வரத்து அதிகரித்து காணப்படுவதால் தக்காளியின் விலை ரூ. 5 முதல் ரூ. 7 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதத்தில் ரூ. 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் தற்போது ரூ.25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் கத்தரிக்காய் ரூ.15 -க்கும், வெண்டைக்காய் ரூ. 15-க்கும் , கேரட் ரூ. 30 -க்கும், கோஸ் ரூ. 10 விற்பனை செய்யப்படுவதால் பெரும்பாலான காய்கறிகள் வீணாக போவதாக விவசாயிகள் தங்களது வேதனை தெரிவிக்கின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment