சப்பாத்தி, பரோட்டாக்கு புதுசா… சரவணபவன் ஸ்டைல் வெஜிடபிள் வெள்ளை குருமா ட்ரை பண்ணலாமா?

சப்பாத்தி, பரோடாக்கு இதுக்கு எப்பவும் நம்ம காரமான குருமா தான் சாப்பிட்டிருப்போம், சரவணபவன் அப்படி பெரிய ஹோட்டல்ல தான் ஸ்பெஷலா வெஜிடபிள் வெள்ளை குருமா கொடுப்பாங்க, சாப்பிட செம டேஸ்டா இருக்கும். அந்த குருமாவை நம்ம வீட்டுலே தயாரிக்கலாமா..

தேவையானபொருள்கள் :

பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 3
உருளைக்கிழங்கு ,பீன்ஸ்,கேரட் ,பட்டாணி – 250கிராம்
பச்சை மிளகாய் – 5
தேங்காய்துருவல் – கால் கப்
கசகசா – அரை தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு – 5
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு ஏற்ப
எண்ணெய் – தேவையான அளவு
மல்லி புதினா – கைப்பிடி

தாளிக்க :

கிராம்பு
பட்டை
ஏலக்காய்
பெருஞ்சீரகம்

செய்முறை :

முதலில் வெங்காயம், தக்காளி, காய்கறிகளை நன்கு கழுவி நறுக்கி கொள்ளவும். பின்பு பச்சை மிளகாய், தேங்காய்துருவல், கசகசா, சோம்பு, முந்திரி பருப்பு, அனைத்தையும் நன்கு அரைத்து கொள்ளவும்.

கசகசா கரைப்பதற்கு முன்பாக அரை மணி நேரம் ஊர வைத்து அரைத்தால் சுவை மேலும் கூடுதலாக இருக்கும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் , பெருஞ்சீரகம் சேர்த்து தாளித்த பின்பு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பின்பு அதில் தக்காளி போட்டு வதக்கவும்.உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் அதன் பின் காய்கறிகளை சேர்த்து வதக்கவும் , பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும்.

துணிவு vs வாரிசு முதல் காட்சி யாருக்கு? வெளியான அசத்தல் அப்டேட்!

காய்கறி நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை அதில் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும். அதனுடன் மல்லி புதினா தலை தூவினால் வாசனை சிறப்பாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews