Connect with us

ஓணம் பண்டிகை: காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு!

vegtabuls

தமிழகம்

ஓணம் பண்டிகை: காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி வரத்து குறைந்து காணப்படுகிறது.

இதன் காரணமாக இன்றைய தினத்தில் காய்கறிகளின் விலையானது அதிகரித்துள்ளது. அதன் படி, வெங்காயம் ஒரு கிலோ ரூ.20, நாட்டு தக்காளி – ரூ.45, உருளை கிழங்கு – ரூ.30, ஊட்டி கேரட் – ரூ.90, பீன்ஸ் – ரூ.60, வெண்டைக்காய் – ரூ30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் முருங்கைகாய் – ரூ.90, முள்ளங்கி – ரூ.30, எலுமிச்சை – ரூ.120, வாழைக்காய் – ரூ.8, தேங்காய் – ரூ.30க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், ஓணம் பண்டிகை மற்றும் வரத்து குறைவு போன்ற காரணங்களால் விலை அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அதோடு காய்கறிகளின் விலை அதிகரித்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top