ஈவினிங் ஸ்நாக்ஸாக 10 நிமிடத்தில் வெஜ் மோமோஸ் வீட்டிலே செய்யலாம் வாங்க..

சத்து நிறைந்த வெஜ் மோமோஸ் இனி கடைகளில் வாங்க வேண்டாம், வீட்டிலே எளிமையாக செய்து பார்க்கலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – ஒரு கப்

வெங்காயம் – 1

கேரட் – 1

முட்டைகோஸ் – அரை கப்

குடைமிளகாய் – 1

சோயா சாஸ் – ஒரு தேக்கரண்டி

சில்லி சாஸ் – ஒரு தேக்கரண்டி

எண்ணெய் – சிறிதளவு

உப்பு – சுவைக்கு ஏற்ப

சர்க்கரை நோயாளிக்கு சப்பாத்தி வேண்டாம் புதுசா கோதுமை இடியாப்பம் செய்யலாம்!

செய்முறை:

முதலில் கோதுமை மாவை உப்பு, எண்ணெய், கொஞ்சமாக சுடுதண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடங்களுக்கு ஊற வைத்து கொள்ளவும் .

அடுத்து ஒரு கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய குடைமிளகாய், கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்.

அதில் சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் வேகவைத்து இறக்கி வைக்கவும்.

பிசைந்த கோதுமை மாவை பூரி அளவிற்கு தேய்த்து கொள்ளவும். இதன் நடுவில், வதக்கிய காய்களை மசாலாவை வைத்து, அனைத்து பக்கமும் சேர்த்து ஒருசேர மூடவும்.

உடல் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சுரைக்காய் தயிர் குழம்பு!

இதனை 15 நிமிடங்கள் வேக வைத்து கொள்ளவும் . இப்பொழுது சுவையான வெஜ் மோமோஸ் ரெடி.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.