வீட்டிலேயே அரிசி புட்டு செய்வது இத்தனை சுலபாமா?!

பொதுவாக ஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு நல்லது. இட்லி, கொழுக்கட்டை, புட்டு என செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ராகி புட்டு, அரிசி புட்டு, கோதுமை புட்டு சிகப்பரிசி புட்டு, திணை மாவு புட்டு என புட்டுவகைகள் ஏராளம். இன்னிக்கு அரிசி புட்டு செய்வது எப்படி என பார்க்கலாம். புட்டுக்கு மாவை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்வது எப்படி எனவும் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பச்சை அரிசி- 1கப்

உப்பு- தேவையான அளவு

தேங்காய் துருவல்- 1 1/2 கப்

செய்முறை:

ஒரு கப் பச்சரிசியை இரண்டு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். பிறகு நன்றாக கழுவி, நீர் வடித்து, அரிசியை ஒரு காட்டன் துணியில் விரித்து காய வைத்து கொள்ளலாம்.முழுவதுமாக காய கூடாது. லேசான ஈரப்பதத்தில் அரிசி இருக்கவேண்டும். அந்த அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி அரைத்து கொள்ளவும். அரைத்த மாவை சல்லடை கொண்டு சலித்து கொள்ளலாம். சலித்த மாவை தூய வெள்ளை துணியில் கொட்டி இட்லிப்பானையில் வைத்து வேக வைக்கவும்.

15நிமிசத்துல மாவு வெந்துடும். மாவு வெந்ததும், அதை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆறியதும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கட்டி இல்லாமல் பிசையவும். மீண்டும் அதே துணியில் கொட்டி வேக வைக்கவும். 10நிமிசம் மாவு வெந்ததும், அகலமான பாத்திரத்தில் கொட்டி, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து கிளறி, நெய், தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறினால் சுவையான ஆரோக்கியமான அரிசி புட்டு ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews