பாகிஸ்தான் விமானத்தை சுட்டுத் தள்ளிய அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது!

கடந்த சில நாட்களாக நம் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அடுத்தடுத்து இந்தியாவின் உயரிய விருதுகளை வழங்கி கொண்டு வருகிறார். இதில் சினிமா துறையினர், கலைஞர்கள் என பலருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

வீர் சக்ரா விருது

அதன் தொடர்ச்சியாக தற்போது இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வீர் சக்ரா விருது வழங்கியுள்ளார். இதனை இந்திய விமானப்படையில் குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.

குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை நம் பாரத குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்து உள்ளார். டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில்  பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இவர் 2019ஆம் ஆண்டு இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளார். அபிநந்தன் நம் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சித்திரவதையை அனுபவித்தார், இருப்பினும் சொந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் பாகிஸ்தான் விமான படையை தகுதி ஆக்கினார். இதனால் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment