கார்த்தி நடித்த கைதி தெரியும்.. 70 வருடங்களுக்கு முன் வெளியான கைதி படம் பற்றி தெரியுமா..?

கார்த்தி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கைதி திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் 70 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் ஒரு கைதி திரைப்படம் வெளியானது என்பது பலருக்கும் தெரியாது. ஏனென்றால் இந்த படத்தின் காப்பி கூட தற்போது இல்லை. இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் கூட அது நடக்காத காரியம்.

குடும்ப படங்கள், சரித்திர படங்கள், சமூக கதை அம்சம் கொண்ட படங்கள், செண்டிமெண்ட் படங்கள் என வெளிவந்து கொண்டிருந்த கடந்த 50 மற்றும் 60களில் திகில் படங்களை எடுத்த ஒரே இயக்குனர் வீணை எஸ்.பாலச்சந்தர். அவரது இயக்கத்தில் கடந்த 1951 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கைதி.

இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான Dark Passage என்ற படத்தின் தழுவலை கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தின் கதை, விஜயன் என்ற இளம் வாலிபன் படித்து பட்டதாரியாக இருப்பார். ஆனால் மிகவும் ஏழையாக இருப்பார். எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பார். அப்போதுதான் அவருக்கு குதிரை ரேசில் அதிகமாக பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் வரும்.

முன்னணி நடிகர்கள் இணைந்த ஒரே படம்….. ஹிட் அடிக்காமல் போனதே…..!!

kaithi 2

அவர் குதிரை ரேஸில் உள்ள தந்திரங்களை அறிந்து அதில் அதிகமாக பணம் சம்பாதிப்பார். குதிரை ரேஸ் விளையாட வந்த இடத்தில் அவருக்கு ஒரு நண்பர் அறிமுகம் ஆவார். அவருக்கும் தன்னுடைய தந்திரங்களை சொல்லிக் கொடுப்பார். இந்த நிலையில் தான் திடீரென அந்த நண்பர் கொலை செய்யப்படுவார். ஆனால் காவல்துறை விஜயன் தான் கொலை செய்தார் என்று அவரை கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள்.

சாட்சிகள் மற்றும் சந்தர்ப்பங்கள் அவர் கொலையாளி என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கும். எனவே நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை கொடுத்து சிறையில் தள்ளிவிடும். நிரபராதியான தனக்கு தண்டனையா என்று அவர் சிறையில் கதறி கொண்டு இருப்பார்.

சிறையில் விஜயன் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில் எதற்காக நான் இந்த தண்டனை அனுபவிக்க வேண்டும்? உண்மையான குற்றவாளி வெளியே சந்தோஷமாக இருக்கும்போது நான் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? என்று முடிவு செய்து ஒரு கட்டத்தில் சிறையில் இருந்து தப்பிப்பார். அதன் பிறகு அவர் உண்மையான கொலையாளியை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகள், அதில் அவர் வெற்றி பெற்றாரா? என்பது தான் இந்த படத்தின் கதை.

ரஜினிகாந்த் நடிக்க மறுத்த கதை….. திருப்புமுனையாக அமைந்த சூப்பர் ஹிட்படம்… எந்த படம் தெரியுமா….?

kaithi 3

இயக்குனர் வீணை எஸ்.பாலச்சந்தர் தான் விஜயன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அவருடைய கொலை செய்யப்படும் நண்பர் கருணாகரன் ஆக எம்ஆர் சந்தானம் நடித்திருப்பார். இந்த படத்தின் நாயகியாக எஸ் ரேவதி என்பவரும் நடித்திருப்பார்.

இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, எழுதி இயக்கியது மட்டுமின்றி வீணை எஸ்.பாலச்சந்தர் இசையமைக்கவும் செய்திருப்பார். ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இந்த படம் வெளியான காலத்தில் நல்ல வரவேற்பு பெற்றாலும் அதன் பிறகு இந்த படத்தின் காப்பி தொலைந்து விட்டதாகவும் அதன் பிறகு இந்த படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை என்றும் திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.

காதலுக்காக உடன்கட்டை ஏறிய பார்த்திபன்.. புரட்சி செய்த சேரனின் முதல் படம்..!

இந்த படத்தை மீண்டும் பார்க்க வாய்ப்பு இல்லை என்றாலும் இந்த படம் குறித்த சில புகைப்படங்கள் மட்டும் இன்னும் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...