Connect with us

யூடியூபை கலக்கிய ‘வீட்ல விசேஷம்’ டிரைலர் !! இதுவரை எத்தனை மில்லியன் பார்வையாளர்கள் தெரியுமா ??

viddu

பொழுதுபோக்கு

யூடியூபை கலக்கிய ‘வீட்ல விசேஷம்’ டிரைலர் !! இதுவரை எத்தனை மில்லியன் பார்வையாளர்கள் தெரியுமா ??

‘எல்.கே.ஜி’ , ’மூக்குத்தி அம்மன்’ ஆகிய இரண்டு வெற்றி படங்களை அடுத்து ஆர்ஜே பாலாஜி தமிழில் நடித்த திரைப்படம் ’வீட்ல விசேஷம்’.ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான பதாய் ஹோ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார் .

viddu 2

ஆர்.ஜே. பாலாஜி, அபர்ணா பாலமுரளி சத்யராஜ் ,ஊர்வசி நடிகை கேபிஏசி லலிதா, யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ் போன்றோர் நடிப்பில் வெளிவரவுள்ள ‘வீட்ல விசேஷம்’ படத்தின் ட்ரெய்லர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்ய , கிரிஷ் கோபாலாகிருஷ்ணன் இசையமைக்க, செல்வா எடிட்டிங் செய்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஜூன் 17ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி யூடியூபில் 3 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

vidd 3

நேற்று நடந்த லக்னோ – பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் பிளே ஆப் போட்டியின் இடையில் இப்படத்தின் டிரைலரை ஆர்ஜே பாலாஜி வெளியிட்டுள்ளார்.

லெஜண்ட் சரவணா கலர்ஃபுல் டான்ஸ்க்கு இவ்வளோ ரசிகர்களா??.. ட்ரோல்கள் அள்ளுது !!

படத்தின் கதைக்களமாக திருமண வயதில் ஆர்.ஜே. பாலாஜிஉள்ள நிலையில் பாட்டியாகும் வயதில் சத்யராஜ் மனைவி ஊர்வசி திடீரென கர்ப்பம் ஆக அதை தொடர்ந்து அந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட சலசலப்புகளை நகைச்சுவையுடன் தெரியப்படுத்தும் படம் தான் ’வீட்ல விசேஷம்’.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top